சிங்கள – சிங்கள அகராதி

சிங்கள அகராதி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் முக்கிய செயற்பாடாக விளங்குவது ‘மகா சிங்கள அகராதி’ இயற்றும் முயற்சியாகும். அகர வரிசையின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்ட சிங்கள மொழிச் சொற்களின் இலக்கண அமைப்பிற்கு ஏற்ப அவற்றின் பொருள் விளக்கங்களைக் குறிப்பிடுதல் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. ‘மகா சிங்கள அகராதி’ எனும் பெயருக்கேற்ப இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சொற்களுக்கான பொருள் விளக்கங்களை வழங்குவதாக இது அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டு 26 தொகுதிகளையும் 46 பகுதிகளையும் கொண்டதாக இது நிறைவு செய்யப்பட்டது. பின்னர் இதன் மீள் பரிசீலிக்கப்பட்ட பகுதிகள் இயற்றப்படுதலுக்கான செயற்பாடுகள் ஆரம்பம் கண்டதுடன், இதுவரையில் உயிரெழுத்துக்கள் நிறைவுற்ற மீள்பரிசீலிக்கப்பட்ட 5 பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இதன் 6 ஆறாவது தொகுதி வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சிங்கள – ஆங்கில அகராதி

சிங்கள அகராதி இயற்றும் திட்டத்தின் ஆரம்பத்தில் அதன் முதல் கட்டமாக சிங்கள – ஆங்கில அகராதி இயற்றும் முயற்சி ஆரம்பம் கண்டது. சிங்கள மொழியை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்வதற்கும் சர்வதேச அறிஞர்களது மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்தற்கும் இந்த அகராதி உதவியாக அமையும். தற்போது 28 ஆவது பகுதி வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிங்கள – தமிழ் – ஆங்கில மும்மொழி அகராதி

மும்மொழி கொண்ட ஓர் இலங்கையினை உருவாக்கும் அரச கொள்கைகளுக்கு ஏற்ப சிங்கள அகராதி அலுவலகமும் சிங்கள – தமிழ் - ஆங்கிலம் எனும் மும்மொழி அகராதி ஒன்றினை இயற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. மிகவும் பரந்த அடிப்படையிலான செயற்பாடாக அமைந்துள்ள இவ் அகராதியின் முதல் பாகத்தில் சிங்கள – தமிழ் - ஆங்கிலச் சொற்களுக்கான பொருள் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டு, தற்போது, பதிப்பின் மீள் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிங்கள சுருக்க அகராதி

தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையில் இயற்றப்பட்டுள்ள இவ் அகராதியில் சிங்கள மொழிச் சொற்களுக்கான சுருக்கமான பொருள் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டு பகுதிகள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. அதின் மீள் பரிசீலிக்கப்பட்ட முதல் பாகம் விரைவில் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.